


உலக தாய்ப்பால் வாரம் தினம் கொண்டாட்டம் நெட்டூர் ஆரம்பசுகாதர நிலையத்தில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊட்டுதல் குறித்து விழிப்புணர்வு – சத்தான உணவு பெட்டகம்.
டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா வழங்கினார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துதலின் படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நெட்டூர் வட்டார மருத்துவர் குத்தாலராஜ் தலைமை தாங்கினார். மருத்துவர் அர்ச்சனா முன்னிலை வகித்தார். ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் அமைச்சரும், மாநில மருத்துவ அணி தலைவருமான டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திமுக மருத்துவ அணி சார்பில் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களான முந்திரி பருப்பு, பேரிச்சம் பழம், உலர் திராட்சை, சீரகம் வெந்தயம், பூண்டு பாலாடை, உறிஞ்சு கப் மற்றும் தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கையேடு அடங்கிய பெட்கத்தை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிவலார்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் கதிர்வேல், தங்கபாண்டியன், ஒன்றிய இலக்கிய அணி தலைவர் மாஞ்சோலை துரை, மாவட்ட பிரதிநிதி முத்துப்பாண்டி, ஒன்றிய பிரதிநிதி முத்துப்பாண்டியன் கிளை செயலாளர்கள் கணேசன். முத்தையா, சுப்பையா வழக்கறிஞர் சிவக்குமார் உள்பட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலடி அருணா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


