தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார். கருத்து கமலஹாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,” கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் ஆனது இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் என்ற அறிவிப்பை வெளியிட்டது அதனை தொடர்ந்து தி.மு.கவும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இன்றைய பணவீக்கத்தை பொறுத்தளவில் இன்று ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்தாலும் இந்த சிறிய பணமாவது அவர்களுக்கு கிடைக்கும் என்கிற ஆறுதல் எனக்கு இருக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் குறித்த அறிவிப்பை முதல் பட்ஜெட்டில் தி.மு.க தாக்கல் செய்ய வேண்டும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் இந்த திட்டத்தை திமுக சுணக்கம் காட்ட கூடாது”என கமல் தெரிவித்திருக்கிறார்