

இராவுத்தன்பட்டி புறவழிசாலையில் தடுப்புகட்டைகளை வைத்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல். போக்குவரத்து பாதிப்பு
அரியலூர் அருகே புறவழிசாலையில் அமைந்துள்ளது இராவுத்தன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து புறவழிசாலை வழியாக கிராமமக்கள் அரியலூருக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பைபாஸ் சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் தங்கள் கிராமத்திற்கு செல்லும் வழியை அடைத்து சென்டர் மீடியன் அமைப்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஜூலை 19 இந்த தேதியான இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்ததின் பேரில் உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியல் கைவிடபட்டது.
தடுப்பு கட்டைகளை சாலையில் வைத்து பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
