தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாட்சியர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆலங்குளம் வட்டாட்சியர் பட்டமுத்து, இவர் பல்வேறு கிராமங்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தார். ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பிரச்சனைகளை உடனடியாக தீர்வு கண்டு வந்தார். இந்நிலையில் ஆலங்குளம் வட்டாட்சியர் பட்டமுத்துவை வீரகேரளம் புதூர் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராக நியமித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பட்டமுத்துவிற்கு பதிலாக தென்காசி கோட்ட கலால் அலுவலராக பணியாற்றி வரும் பரிமாளா என்பவர் ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.