• Sat. Oct 12th, 2024

ஆலங்குளத்தில் வேட்டை நாய்களுடன் முயல் வேட்டை- 8 பேர் அதிரடி கைது!…

By

Aug 16, 2021

வேட்டையாடிய முயல்கள்-
9-வேட்டைநாய்கள்
3 -பைக்குகள்-
2 ஆட்டோக்கள் பறிமுதல்…

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கரும்புளியூத்து சிவலார்குளம் ஆகிய காட்டுபகுதியில் வேட்டை நாய்களுடன் சிலர் செல்வதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீஸ் ஏட்டு பாலமுருகன், மாரிச்செல்வம், லிங்கராஜா ஆகியோர் திருநெல்வேலி சாலை சிவலார்குளம் பகுதியில்நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அவர் கூட்டாளிகளுடன் முயல்வேட்டை வந்தாக கூறியுள்ளார். அவர் கொடுத்த தகவலின்பேரில் அந்த பகுதியில் வேட்டைநாய்களுடன் பதுங்கியிருந்த தாழையூத்தை சேர்ந்த தடிவீரன் (21),தங்கம் (21), ராஜவல்லிபுரம் வலதி (20). சங்கர் நகர் இசக்கிபாண்டியன், துரை(29), மணக்காடு சுந்தர் (30), ஆனந்த் (32) சிவலார்குளம் பாண்டி (23) ஆகிய 8 பேர் சிக்கினர். இவர்கள் 9 வேட்டைநாய்கள், 3 பைக்குகள், 2 ஆட்டோக்களுடன் வந்திருந்தனர்.


இந்த நிலையில் ஆலங்குளம் போலீசார் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆலங்குளம் வனச்சரக வனவர் குமார், சிவலார்குளம் வனக்காப்பாளர் டென்சிங். வேட்டை தடுப்பு காவலர் ஈசாக் பிரபு ஆகியோரிடம் வேட்டைக்கு வந்தவர்கள், வேட்டைநாய்கள், மற்றும் வாகனங்களை நேற்றிரவு ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் ஆலங்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *