• Fri. Apr 18th, 2025

ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியில் இலவச கோவிட்-19 தடுப்பூசி முகாம்!…

By

Aug 7, 2021

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் டைமன் வித்யாலயா பள்ளி மற்றும் ஆண்டிபட்டி ஹோட்டல், பேக்கரி, டீ ஸ்டால் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து இலவச கோவிட்-19 தடுப்பூசி முகாம் நடத்தியது. உலகமெங்கும் கரானா மூன்றாவது அலை வெகு வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .மேலும் தொண்டு நிறுவனங்கள் ,தனியார் அமைப்புகள் முழுவீச்சில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

அதனடிப்படையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் டைமன் வித்யாலயா பள்ளியில் நடந்த இலவச தடுப்பூசி முகாமை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ஜி.கே. பாண்டியன் முன்னிலை வகித்தார். டைமன் பாண்டி செல்வன் வரவேற்றுப் பேசினார். இந்த முகாமில் டாக்டர் மாரிஸ்வரன் தலைமையிலான குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர். முகாமில் கோவிஷீல்டு தடுப்பூசி 500 நபர்களுக்கு போடப்பட்டது .முகாமில் ஓட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் சுப்பு, பொருளாளர் அர்ஜுனன்,மாயாண்டி, சின்னதுரை, முன்னாள் சேர்மன் ஆ .ராமசாமி ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.