தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். நகர பொதுச்செயலாளர் அழகர்சாமி, மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் பெருமாள் வரவேற்று பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஆண்டிப்பட்டி நகர் மற்றும் ஒன்றிய பகுதியில் உள்ள ஓடை, கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வரத்து ஏற்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜக்கம்பட்டியில் உள்ள நெசவாளர்களுக்கு குறைந்த விலையில் தரமான நூல் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் .கடந்த 8 மாதமாக நெசவாளர்களின் சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்து விரைவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் பாரதப் பிரதமர் மோடியை அவமதித்தும் ,ஜாதி ,மத துவேஷம் ஆக பேசியுள்ள மதவெறியர் ஜார்ஜ் பொன்னையாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில்நகர துணைத்தலைவர் வீர பழனி, இளைஞரணி தலைவர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் கணேசன், மாவட்ட பிரச்சார அணி கண்ணன், விவசாய அணி தலைவர் ராமராஜ், வர்த்தக அணி தலைவர் பாண்டியன், நிர்வாகி எஸ் .எம். ராஜா உள்பட செயல்வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.