• Wed. Feb 19th, 2025

ஆடி மாதத்தின் இரண்டாவது பிரதோஷ வழிப்பாட்டை முன்னிட்டு, பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு!…

Byadmin

Aug 6, 2021

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறும். ஆடி மாதத்தின் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு, பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால், எலுமிச்சை சாறு, திரவியப்பொடி உள்ளிட்ட ஒன்பது வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தும், முக கவசம் அணிந்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.