• Fri. Mar 29th, 2024

ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்…

Byadmin

Aug 3, 2021

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை மற்றும் கரையோரப் பகுதிகளில் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவை கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு – பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கொரோனா 3வது அலையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மேலும் ஆடி மாதத்தில் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பக்தர்கள் அதிகமாக கூடாமல் தடுப்பதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவித்திருந்தது அதன்படி திருச்சி மாவட்டத்தில் முக்கிய கோயில்கள் அனைத்தும் நேற்றும் இன்றும் முழுவதுமாக பக்தர்களுக்கு அனுமதி ஆனது மறுக்கப்பட்டிருந்தது ஆகம விதிப்படி பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது.

மேலும் ஆடி மாதத்தில் முக்கிய விழாவாக இந்துக்கள் கொண்டாடப்படும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழாவாகும் இந்நாளில் காவிரி கரையோரப் பகுதிகளில் காவிரி தாய்க்கு படையலிட்டு பூஜைகள் செய்வது வழக்கம் மேலும் புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலைகள் ஆற்றில் விட்டு புதிய தாலிகளை மாற்றிக் கொள்வார்கள், இந்த ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையோர பகுதிகளில் வழக்கமாக வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக ஆடிப்பெருக்கு விழாவை காவிரி கரையோர பகுதிகளில் பொதுமக்கள் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை அய்யாளம்மன் படித்துறை ஓடத்துறை படித்துறை உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகள் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

பொதுமக்கள் காவிரி ஆற்றின் கரைகளில் கூடி வழிபாடு செய்வதற்கும் கூடுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கு வரவேண்டாம் என தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

 

இதனால் ஆடிப்பெருக்கு விழா அன்று கோவில்களில் தரிசனம் செய்ய முடியாமலும் கரையோரப் பகுதிகளில் கொண்டாட முடியாமல் போனதால் பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பாரம்பரியத்தை காத்திடவும் பெண்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடிப் பெருக்கு விழாவை இனிவரும் நாட்களில் பாதுகாப்பான நெறிமுறைகள் உடன் கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு புதுமணத் தம்பதியினர் கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *