தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நெல்லை மாவட்ட கிளையின் சார்பில் நலிவுற்ற ஏழை எளிய மக்களுக்கு ரூபாய் 2 லட்சம் செலவில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
நெல்லை பேட்டை சத்யா நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ் தலைமை தாங்கினார் ,மாநில செயலாளர் முருகேசன் மாநில செயற்குழு உறுப்பினர் பிரமநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர் பால்ராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் , மானூர் வட்டாட்சியர் சுப்பு, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் மணிமேகலை ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கிநீர்,தொழுநோயாளிகள் பார்வையற்றோர், சலவைத் தொழிலாளர்கள் ,சவர தொழிலாளர்கள் ,மாற்றுத்திறனாளிகள் உட்பட பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களை கண்டறிந்து 170 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி 20 விதமான மளிகை பொருட்கள் தொகுப்பு காய்கறிகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் சிஐடியூ நெல்லை மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் ,நெல்லை,சேரன்மகாதேவி சேர்ந்தவை மற்றும் வள்ளியூர் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் அண்ணாதுரை,காமராஜ், துரை பாக்கியநாதன் ,காமராஜ் சபரிகிரிநாதன் ,கென்னடி அமுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர் பொருளாளர் அமுதா நன்றி கூறினார்.