


திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு நீதி நாளில் தலித் விடுதலை இயக்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆதி தமிழர் பேரவை போன்ற தலித் அமைப்புகள் ஆட்சியரிடம் பஞ்சமி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மனு கொடுத்துனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கருப்பையா கூறும் போது
தமிழகத்தில் 1892ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்காக 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் 3204 ஏக்கர் 90 சென்ட் நிலங்கள் வழங்கப்பட்டன.
இந்த பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்று தலித் விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஆனால் அரசு தரப்பில் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக ஒட்டன்சத்திரம் கரியாம்பட்டி சவ்வாது பட்டி வாகரை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள பஞ்சமிநிலங்கள் மீட்கப்பட்டு தலித் மக்களுக்கு வழங்க ஆட்சியர் ஆவண செய்ய வேண்டும் என்று கருப்பையா மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்ததாக பேட்டி அளித்தார்.


