• Wed. Apr 24th, 2024

அல் அமீன் ஐக்கிய ஜமாத் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர் அலுவலகங்களில் மனு வழங்கப்பட்டது….

Byadmin

Jul 15, 2021

கோவையில் பெருகி வரும் போதை கலாச்சாரத்தை ஒழிப்பது,மற்றும் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தரமற்ற பணிகளை சீரமைப்பது தொடர்பாக அல் அமீன் ஐக்கிய ஜமாத் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட நிர்வாகம்,மாநகராட்சி மற்றும் காவல் ஆணையர் அலுவலகங்களில் மனு வழங்கப்பட்டது….

கோவை அல் அமீன் ஐக்கிய ஜமாத் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் நிர்வாகிகள் உபைதுர் ரஹ்மான்,ஜாபர் சாதிக்,மற்றும் காசிம் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ,மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை ஆணையர் அலுவலகங்களில் மனு ஒன்று வழங்கப்பட்டது.மனுவில் ,கோவை மாநகராட்சி 86 வது வார்டிற்கு உட்பட்ட பகுதியான அண்ணா நகர் , அல் அமீன் காலனி , ரோஸ் கார்டன் , பிலால் எஸ்டேட் , பொன்விழா நகர் , அன்பு நகர் மற்றும் சில பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இந்த பகுதிகளுக்கு என தனியாக தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டியும், மேலும் சமீப காலமாக எங்கள் பகுதியில் 15 வயதிற்குட்பட்ட சிறு வயதினர் மற்றும் இளைஞர்கள் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி பெரும் ஆபத்தில் உள்ளனர் . இவை கோவையில் மட்டுமல்ல பெரும்பாலான மாவட்டங்களில் இது போன்ற தீய செயல்கள் நடைபெறுவதை அவ்வப்போது பத்திரிக்கையின் வாயிலாக அறிய முடிகிறது . கஞ்சா , மற்றும் போதை பொடிகள் மட்டுமல்லாமல் பெயிண்ட் தின்னர், வலி மாத்திரைகள் , , ஊசிகள் , இருமல் மருந்து மற்றும் பல பொருட்களை பயன்படுத்தி போதை பொருட்களாக பயன்படுத்தி போதைக்கு அடிமையாகி உள்ளதால்,இதனை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து,நடவடிக்கை எடுப்பது, கடந்த கால ஆட்சியின் போது செய்யப்பட்ட பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளில் செய்யப்பட்ட தரமற்ற பணிகளை சீர் செய்வது உள ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது.இதில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மிக்சி காதர், ஜாகீர் அசாருதீன் ஆசாத் சிராஜ்தீன் அபி அர்சத், உசேன், அக்கீம், ஜாபர் ஆகியோர் உடனிருந்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *