குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாத்தூர் தொட்டி பாலத்தின் அருகில் உள்ள,62 ஆண்டுகள் பழமையான.மலங்கரை கத்தோலிக்க ஆலையம் மற்றும் அதன் பங்கு அலுவலகம் புதிபிக்கப்பட்டு திறப்பு விழா திருப்பலிக்கு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில்.
இந்து அமைப்பினர்.நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் எம்.ஆர். காந்தி தலைமையில்.சீர் செய்யப்பட்ட ஆலையத்தை திறக்க கூடாது என ஆர்பாட்டம் நடத்திய நிலையில்.
அன்று மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்த பெண் அதிகாரி மைல் ஆலையம் பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்ட போது தேவாலைய நிர்வாகிகள் அதற்கான சான்றுகளை காண்பித்ததை பார்வையிட்டு சென்ற நிலையில்.
காவல்துறை அந்த ஆலைய பகுதியை வண்ண பிளாஸ்டிக் சாக்கு கொண்டு ஆலைய பகுதியை மறைத்து கட்டியது டன் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை கண்டித்து.
அருமனை கிறித்தவ இயக்கம் ஜனநாயக பேரவை மற்றும் அனைத்து கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்த திட்டமிட்ட சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு அறவழி போராட்டம் நடத்த போவதாக அறிவித்து காவல்துறை அனுமதி கேட்ட நிலையில்.காவல்துறை ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்காவிட்டாலும்.
புகழ்பெற்ற அருமனை கிறிஸ்துமஸ் விழா மைதானத்தில் இருந்து,தேவாலைய அனுமதி மறுக்கப்படும் இடமான பனங்கரை நோக்கி ஊர்வலம் என அறிவித்த அதே தினத்தில்.இந்துத்துவ அமைப்புகளும் ஊர்வலம் நடத்த போவதாக அறிவித்து மாவட்ட காவல்துறை.இரண்டு ஊர்வலங்களும் கும் அனுமதி கொடுக்கவில்லை.
ஊர்வலம் என்று அறிவிக்கப்பட்ட தினத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் மாலை ஊர்வலத்திற்காக மக்கள் திரண்டு நிலையில்.
காவல் துறை தடைகாரணமாக கடந்த இரண்டு தினங்களாக அருமனை யில் ஆண்,பெண் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
டி.ஐ.ஜி.பிரவின்குமார்அபிநவ், தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் தலைமையில் காவலர்கள் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று மாலை குறித்த நேரத்தில் கிறித்தவ இயக்கத்தினர் அருமனை பகுதியிலிருந்து பேரணி செல்ல முயன்ற போது.தொடங்கிய இடத்திலே ஊர்வலத்தை காவல்துறை யினர் தடுத்து நிறுத்திய போதும்
இந்த நிகழ்வின் தலைவரான அருட்பணி.ஜார்ஜ் பொன்னையா.அருமனை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி இயக்க தலைவர் சி.ஸ்டீபன்மற்றும் போராட்ட குழுவினரிடம்.காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி பத்து நாட்கள் அவகாசம் தாருங்கள் சுமுகமான முடிவுகள் எடுக்கலாம் என தெரிவித்ததை அடுத்து.ஊர்வலத்திற்கு பதில்.
அருமனை கிறித்தவ விழா மைதானத்தில் கண்டன கூட்டம் நடத்தி இறுதியில்.காவல்துறை உயர் அதிகாரிகள் முன்.விளவங்கோடு வட்டாட்சியர் விஜயலெட்சுமியிடம் மனு கொடுத்தனர்.
அருமனை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 1500_காவலர்கள் குவிந்த பரபரப்பு நிலை அமைதிக்கு வந்தது.