ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கார்குடி ஓடையில் அனுமதியின்றி சிலர் மணல் அள்ளுவதாக
தா.பழூர் போலீசாருக்கு புகார் எழுந்தது.
இதையடுத்து ஜூலை 19ஆம் தேதியான இன்று அதிகாலை சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கோட்டியால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே அனுமதியின்றி மணல் எடுத்துவந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து இதுபற்றி தா.பழூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.