• Thu. Jan 23rd, 2025

அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்…

Byadmin

Aug 5, 2021

கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் மது கொள்முதல் செய்வதில் தடைகளை ஒதுக்கீடு செய்வதில், பணிநியமனம் பணியிடமாறுதல், அதிகாரிகள் நியமனம் கடைகளுக்கு சரக்கு அனுப்புவதில் முறைகேடு என பல முறைகேடுகள் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்றுள்ளன.

இந்த முறைகேடுகள் குறித்து புதிதாக பதவியேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு விசாரணை செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி அரசு ஊழியர்களாக டாஸ்மாக் ஊழியர்களை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தின் நோக்கம் குறித்து சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கோபால் இவ்வாறு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.