


சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கன்னியாகுமரி, தஞ்சை, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், தர்மபுரி. ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுக முன்னாள் எம்.பி. கோவிந்தராஜன், அதிமுக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வ.து.நடராஜன், ஆகியோர் தலைமையில் திமுகவில் இணைந்தனர். முன்னாள் அதிமுக அமைச்சர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறும் போது அதிமுக எதிர்காலம் முடிந்து போன கதை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக தனது தனித்தன்மையை இழந்துவிட்டது என்றார். இந்நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

