• Mon. Jan 20th, 2025

அகழாய்வுகள் தேவையற்றது என சில தேவையில்லாதவர்கள் கூறுவதை எடுத்துக்கொள்ள வேண்டாம். – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.

Byadmin

Jul 29, 2021

அகழாய்வுகள் தேவையற்றது என சில தேவையில்லாதவர்கள் கூறுவதை எடுத்துக்கொள்ள வேண்டாம் அவர்கள் வயிறு எறிவது எரியட்டும் எனவும், அண்ணா சொல்லியதுபோல் தமிழரின் நாகரிகம் பண்பாடு அகிலம் எங்கும் தீ பரவட்டும் உணர்வு பொங்கட்டும். -அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி*

திருச்சுழி செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக தொழில் துரை, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:

உலகப்பொது முறையாக இருக்கக்கூடிய திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் தமிழக அரசை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.

உலகெங்கும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வு அறிக்கைகளை உருவாக்கி அதன் வாயிலாக தமிழாய்வுகள் கடல் கடந்து தேசங்களில் உள்ள நாடுகளிலும் பெருமளவு நடைபெறுவதற்கான தமிழரின் பெருமையை தெரிந்து கொள்வதற்காகவும் திட்டங்களை செயல்படுத்த தமிழ் வளர்ச்சித் துறைக்கு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

தமிழின் வளர்ச்சி, பெருமை மற்றும்தொன்மை என தமிழருக்கு தனி சிறப்பு உள்ளது, தமிழ் இலக்கியச் சான்றுகள் மட்டுமின்றி வரலாற்றுச் சான்றிதழ்களும் உள்ளது. அதனை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க தமிழ் தொல்லியல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இதற்காகத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழர்களின் தொன்மை வரலாறு உள்ளிட்டவை அறிவியல் பூர்வமாக தெரிகிறது.

தற்போது கூட கீழடியில் வெள்ளியிலான முத்திரை காசு கிடைக்கப்பெற்றது. அந்தக் காசு 14 சென்டி மீட்டர் கீழே கிடைக்கப்பெற்றுள்ளது, அது கிமு 2 ஆம் சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது இதன் மூலம் அப்போதைய நாணய பரிமாற்றம் நடைபெற்றது என்பதற்கான சான்றாக உள்ளது.

இவ்வளவு சான்றிதழ் கிடைத்தும் இதனை ஏற்றுக்கொள்ள சிலருக்கு மனம் வரவில்லை, தமிழின் பெருமை, தமிழின் தொன்மை உலகளாவிய அளவிற்கு வருவதில் சிலருக்கு வயிறு எரிகிறது என்றார். அந்த வயிறு நன்றாக எறியட்டும் அவர்களுக்கு நான் சொல்வது என்றால் பற்றி கவலையில்லை தொடர்ந்து அகழாய்வு மேற் கொள்வோம்.

தமிழின் பெருமையை தமிழரின் நாகரீகத்தின் தொன்மையின் சான்றிதழை அறிவியல் பூர்வமாக தொடர்ந்து நிரூபிப்போம்.

அகழாய்வுகள் தேவையற்றது என சில தேவையில்லாதவர்கள் கூறுவதை எடுத்துக்கொள்ள வேண்டாம் அவர்கள் வயிறு எறிவது எரியட்டும் எனவும், அண்ணா சொல்லியதுபோல் தமிழரின் நாகரிகம் பண்பாடு அகிலம் எங்கும் தீ பரவட்டும் உணர்வு பொங்கட்டும்.

*துக்ளக்கில் கீழடி குறித்து வெளியிட்டதுக்கான பதிலா என்ற கேள்விக்கு:*

யாராையும் குறிப்பிடவில்லை தமிழ்பண்பாட்டு சூழலில் நாம் முன்னெடுத்துள்ள முயற்சியை யாருக்குச் கொச்சைப் படுத்தினால் அது கண்டிக்கத்தக்கது.

*திருமங்கலம் கல்லுப்பட்டி பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் பழங்கால தொல்லியல் பொருள்கள் ஆய்வு தொடருமா என்ற கேள்விக்கு:*

சிந்துசமவெளி நாகரீகம் தொன்மைக் இதற்கான அடையாளங்கள் பல்வேறு இடங்களில் உள்ளது. ஆனால் இதனை தொல்லியல் துறையும் உள்ளிட்ட அனைவரும் இணைந்து ஆலோசித்து முதல்வரிடம் ஆலோசனை கேட்டு முன்னெடுப்போம் என கூறினார்.