• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பசுமை இந்தியாவில் பங்கேற்க மகேஷ்பாபு வேண்டுகோள்!…

Byகுமார்

Aug 8, 2021

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாள் ஆகஸ்ட் 9-ம் தேதி நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தனது பிறந்த நாளில் ரசிகர்களை பசுமை இந்தியா சவாலில் பங்கேற்பதை பார்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை கொண்டாட எனது பிறந்தநாளில் தலா 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பதிவுகளை எனக்கும் டேக் செய்யுங்கள். அப்போதுதான் நான் அதை பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.

தற்போது மகேஷ்பாபு நடித்து வரும் சர்காரு வாரிபாட்டா படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திரைக்கு வருகிறது.