• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பக்கத்து வீட்டு பாத்ரூமில் கேமரா.. பெண்கள் குளிப்பதை வீடியோவில் பார்த்து ரசித்த முன்னாள் போலீஸ் ஆபீசர் மகன் கைது!..

By

Aug 22, 2021

பக்கத்து வீட்டு பாத்ரூமில் வெப்கேமராவை செட் செய்து பெண்கள் குளிப்பதை பார்த்து ரசித்த முன்னாள் காவல் உதவி ஆய்வாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் தெற்குவீதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷன். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை இவரது வீட்டின் குளியலறையின் மேல ஏதோ மின்னுவது போல் இருப்பதை பார்த்த வெங்கடேஷின் மனைவி, தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குளியலறை சென்று பார்த்த போது வெப் கேமரா சார்ஜ் இறங்காமல் இருப்பதற்காக பவர்பேங்க் உடன் இணைத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து தஞ்சை மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வெங்கடேஷின் வீட்டின் அருகில் வசிக்கும் நசீர்அகமது (35) என்பரை கைது செய்தனர். 6 வயது பெண் குழந்தைக்கு தந்தையானவர் நசீர் அகமது, அவரின் தந்தை ஒய்வு பெற்ற முன்னாள் காவல் ஆய்வாளர். அவரின் மனைவி அரசு ஊழியர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அண்டை வீட்டில் வசிக்கும் வெங்கடேஷனின் மனைவி மற்றும் மகள் குளிப்பதை எட்டி பார்த்ததாக இருவீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெங்கடேஷின் வீட்டிற்கு வேறு ஒருவருடைய வீட்டின் குளியலறை உள்ளது. அந்த வீட்டின் ஓனர் அங்கு வசிப்பதில்லையாம், வீட்டிற்கு யாராவது வந்தால் தேவைப்படுமே என்பதற்காக சாவியை நசீர் முகமதுவிடம் கொடுத்துள்ளனர். இதனை பயன்படுத்தி காலியாக உள்ள வீட்டின் குளியலறை கண்ணாடியை கழற்றி, ஒரு அடி இடைவெளியில் உள்ள எனது குளியலறையின் மேல வெப்கேமராவை பொருத்தி வெங்கடேஷனின் மனைவி மற்றும் மகள் குளிப்பதை ரசித்துள்ளார். தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்த மேற்கு காவல்துறையினர், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.