• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

எங்கெங்கே எல்லாம் மழை… சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்…..

Byadmin

Jul 26, 2021

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, திண்டுக்கல், தென்காசியில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

அதோடு தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் மேலும் எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் கூறியிருக்கிறது.