• Sun. Apr 28th, 2024

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர்சாதிக் கைது

Byவிஷா

Mar 9, 2024

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர்சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்த கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தலுக்கு பின்னால் திரைப்படதயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திமுகவிலிருந்து ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார். ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீம் தலைமறைவாகினர்.
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *