• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சிகரெட்டிற்கு பணம் கேட்டதால் வாலிபர்கள் பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

BySeenu

Apr 10, 2024
கோவை விளாங்குறிச்சி சாலை தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை அருகே பெட்டிக்கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு இரவு மது போதையில் சென்ற அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பாலா மற்றும் அவரது நண்பர்கள் அறிவு, வரதராஜன் ஆகியோர் சிகரெட் வாங்கியுள்ளனர். அப்போது வாங்கிய சிகரெட்டிற்கு பெட்டிக்கடை உரிமையாளர் பணம் கேட்கவே ஆத்திரமடைந்த பாலா உள்ளூர் காரணாகிய என் மீது நம்பிக்கை இல்லையா என கேட்டு தகறாரில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்து வேகமாக சென்ற மூவரும் சில நிமிடங்களில் திரும்ப வந்து குவாட்டர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி பெட்டிக்கடை மீது வீசி தப்பியோடியுள்ளனர். எதிர்பாராத நேரத்தில் பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்த பீளமேடு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

மேலும் தப்பியோடிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.