திருப்பூர் மாவட்டம் விஜயாபுரத்தை சேர்ந்தவர் அபிஷேக் 22. இவர் அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரி முடிந்து அழகுமலை பெருந்தொழுவு சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளார்.

அப்போது வளைவில் திருப்ப முடியாமல் அந்த இரு சக்கர வாகனமானது சாலையோர கம்பி வேலியின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அபிஷேக்கை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கலூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.