• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளைஞர் கொலை!

Byகுமார்

Apr 20, 2022

மதுரை பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள கடையின் வாசலில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடைந்துள்ளார். உடனே சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பாலை போலீசார் முருகானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் நண்பர்களுடன் இரவு மது அருந்தியதில் வாக்குவாதம் நடைபெற்று அது தகராறில் முடிந்துள்ளது. இதில் உடன் வந்தவர்கள் முருகானந்தத்தின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.