• Mon. Apr 21st, 2025

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள்

BySeenu

Jan 30, 2025

கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள். அதில் ஒருவர் தப்பி ஓட்டம் !!!

கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில், இதுவரை காவல் துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள் .

கோவை மாவட்டத்தில் நகர் பகுதிகள், ஊரக பகுதிகள் என வேறுபாடு இல்லாமல் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள், போதை ஊசிகளின் விற்பனை நாள்தோறும் அதிகரித்து வருவது, பலரையும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 9 மணி அளவில் கோவை உக்கடம் வின்செண்ட் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த இளைஞர்களை பிடித்து அப்பகுதி மக்கள் விசாரித்து உள்ளனர்.

அப்போது முன்னுக்கு, பின்னாக பேசிய அவர்கள், திடீரென ஒருவன் அங்கு இருந்து தப்பி ஓடி உள்ளான். உடனே சுதாரித்து கொண்ட பொதுமக்கள் இருவரை சுற்றி வளைத்து பிடித்து அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் ஏராளமான போதை மாத்திரைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

அதை தொடர்ந்து. கோவை உக்கடம் காவல் நிலையத்தில் தகவல் அளித்து உள்ளனர்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த உக்கடம் காவல் நிலைய போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் வடவள்ளியை சேர்ந்த நிரஞ்சன், உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த பைசல் என்பது தெரியவந்து உள்ளது.

மேலும் தப்பி ஓடியவர் குறித்தும், இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போதை மாத்திரை விற்பனையை தடுத்து நிறுத்தி, இளைஞர்களின் வாழ்கைக்கு உதவியாக இருந்த பொதுமக்களின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.