மதுரையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கர ஆயுதத்துடன் கும்மாளமிடும் இளைஞர்கள்; சமூக வலைதளங்களில் பரவும் காட்சி
மதுரை செல்லூர் 50 அடி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த முத்து மணி என்பவர் தனது பிறந்த நாளை நண்பர்கள் புடை சூழ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
குறிப்பாக பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முத்துமணியின் நண்பர்கள் சிலர் அவருக்கு 3 அடி வாளை முத்து மணிக்கு பரிசாக அளித்து கும்மாளம் அடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.தொடர்ந்து இளைஞர்கள் இதுபோன்று பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது பட்டாக்கத்தியுடனும், வாள் கொண்டும் கேட்க வெட்டி அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பயங்கர ஆயுதங்கள் கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கட்டப்படுத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.