• Sat. Jun 3rd, 2023

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், உண்டியல் காணிக்கையாக 37 லட்சம் ரூபாய் கிடைத்தது…..

ByKalamegam Viswanathan

May 19, 2023

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ளது, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். மிகவும் சக்தி வாய்ந்த இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருவார்கள். பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியல்களில் காணிக்கை செலுத்துவார்கள்.

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய உண்டியல் பணத்தை எண்ணும் பணி, கோவில் உதவி ஆணையர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 37 லட்சத்து, 26 ஆயிரத்து, 024 ரூபாய் பணமும், 151 கிராம் தங்கமும், 971 கிராம் வெள்ளிப் பொருட்களும் காணிக்கையாக கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது கோவில் பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *