• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

யூத் ஹப் புதிய கிளையை, மரினா வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் திறப்பு..,

Byஜெ.துரை

Nov 3, 2023

யூத் ஹப் சென்னையில் தமது புதிய கிளையை பழைய மாமல்லபுரம் சாலையில்[OMR] அமைந்துள்ள மரினா வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் திறந்துள்ளனர்.

தமிழகத்தின் தலைசிறந்த விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான நாசா யூத் ஹப் சென்னையில் தமது புதிய கிளையை பழைய மாமல்லபுரம் சாலையில்[OMR] அமைந்துள்ள மரினா வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் திறந்துள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே பெசன்ட் நகரிலும், கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியிலும் தங்களது கிளையை நிறுவி உள்ளனர். தங்களது நான்காவது கிளையை அடுத்ததாக கோயம்புத்தூரிலும் திறக்க உள்ளனர். திறப்பு விழாவானது திரை நட்சத்திரங்களால் நிறைந்த விழாவாக அமைந்தது.

விழாவில் சென்னை-28 நட்சத்திரங்களான மிர்ச்சி சிவா,பிரேம்ஜி அமரன்,அஜய் ராஜ், சிவா,சுஜா வருணி மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இங்கு பௌலிங், ஸ்னூக்கர், லேசர் டேக்,பிஎஸ்5,விஆர், ஆர்கேட் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட சிறந்த இடமாக அமைந்துள்ளது.

விழாவில் திரை நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்தனர். நிறுவனர் நாசர் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.