• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

மதுரை செல்லம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் – 3 லட்சத்து 39 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் – இருவரிடம் விசாரணை…

ByM.Bala murugan

Nov 2, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.,

அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளரான செல்வி என்பவரிடம் 90 ஆயிரத்து 800 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலிசார், செல்விக்கு கொடுக்க வைத்திருந்தாக செல்லம்பட்டியைச் சேர்ந்த பதிவு செய்யாத பத்திர எழுத்தரான ராமச்சந்திரன் என்பவரிடமிருந்து 2 லட்சத்து 48 ஆயிரத்து 200 ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து இருவரிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.