
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 7 வது வார்டு பகுதியில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான பொறியாளர் யுவராஜ் துரை ஆலோசனையின் பேரில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 7 வது வார்டு கவுன்சிலர் சத்தியமூர்த்தி தலைமையில் முன்னாள் முதல்வர் மறைந்த டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை தொடர்ந்து அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உபகரண பொருட்களை திருக்கழுக்குன்றம் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்லா மற்றும் திருக்கழுக்குன்றம் பேரூர் மாணவரணி துணை அமைப்பாளர் சாய் சதிஷ் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

