
மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலத்தில் பழங்காநத்தம் ஆண்டாள்புரம் பகுதியில் இருந்து காளவாசல் நோக்கி இரவு 11.45 மணியளவில் பல்சர் பைக்கில் அதிவேகமாக ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா வயது 28 வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். ஹெல்மெட் அணியவில்லை. பாலத்தில் இறக்கத்தில் வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிலை குலைந்து, பாலத்தின் தடுப்பு மீது மோதி, சில அடி தூரம் இழுத்து சென்று தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக 108 அவசரகால் உறுதிக்கு தகவல் தெரிவித்து, காளவாசல் பகுதியில் இருந்து வந்த 108 அவசர கால ஊர்தி வாகனம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இது சம்பவம் குறித்து, மதுரை எஸ். எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இதே பாலத்தில் மருந்து விற்பனை நிலையத்தில் வேலை பார்க்கும் இளைஞர் டிராக்டர் மூர்த்தி உயிர் எழுந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் விபத்துக்கு உள்ளாகும் விஓசி பாலம் பாலத்தை இடித்து அகலமாக படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தொடர் விபத்துகளால் பரிதவித்து வரும் பாலத்தினால் பொதுமக்கள் அதில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

மேலும் அதிவேக பைக்குகளில் இளைஞர்கள் கண்மூடித்தனமாக செல்வதாலும் இவர்களால் மட்டுமல்லாது, எதிரே வரும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதுடன் காயங்களுடன் செல்லும் அவலம் உள்ளது. போக்குவரத்து காவல்துறையினர் எவ்வளவோ தடுப்புகள் போட்டாலும் அதையும் கண்டு கொள்ளாமல் செல்லும் இளைஞர்களாலே விபத்து அதிக அளவு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
