• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் போதைப்பொருள் விற்பனை 900 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது..,

ByKalamegam Viswanathan

Oct 11, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்கள் தொடர்ந்து போதைக்கு அடிமையாகி, கொலை, திருட்டு என பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.

தமிழகத்தில் முழுவதும் போதையை கட்டுப்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது இளைஞர்கள் மது மற்றும் கஞ்சாவிற்கு அடிமையாகியிருப்பதுடன், புதுவிதமான போதை மாத்திரைகளையும் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
​

இந்நிலையில், சோழவந்தான் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சோழவந்தான் தபால் நிலையம் அருகே சமயநல்லூரை சேர்ந்த கிஷோர் குமார் (வயது 25) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரிடமிருந்து 900 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, சோழவந்தான் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

​கடந்த சில மாதங்களாகவே சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.