இந்திய தொழில் முனைவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி CEDOI AWARDS 2026 மதுரை சிந்தாமணியில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கட்டர் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் பங்கேற்று தொழில்முனை அவர்களுக்கு விருதுகள் வழங்கினர். ரங்கராஜ் பாண்டே மதுரை முத்து உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பேசும்போது: வெளியில் இருந்து வரும் முதலீட்டாளர்களுக்கு தெரிவதைவிட இங்கு தொழில் செய்யும் உங்களுக்குத்தான் மக்களுக்கு என்ன தேவை என தெரியும். நம்முடைய பொது அரசு வந்த பிறகு இது மென்மேலும் வளர வேண்டும் உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும். உங்களுக்கு எந்த மாதிரியான ஒத்துழைப்பு வேண்டும் என்றாலும் கண்டிப்பாக இந்த அரசு 100% செய்ய தயாராக உள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறுபான்மை துறை அமைச்சர் ஷாஜகான் பேசும்போது: முதலமைச்சராக இருக்கக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பான இலக்கை நிர்ணயத்துள்ளார் 2035 ஆம் ஆண்டு 1.5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இலக்காக நிர்ணயத்தை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். முதல்வரின் காணக்கூடிய கனவை நினைவாக்க கூடிய வகையில் இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு மாறிக்கொண்டு வருகிறது.

நடைபெற்று வரும் ஆட்சியில் லஞ்சம், ஊழல் அனைவருக்கும் நல்லிணக்கத்தோடு அடுத்த கட்ட நகர்வை நோக்கி கொண்டு செல்லும் ஆட்சியாக இருப்பதால் உங்களுடைய கோரிக்கை எல்லாம் தொழில் தொடங்குவதற்கு தொழிலை விரிவுபடுத்துவதற்கும் எல்லா வகையிலும் ஒத்துழைப்பை வழங்கக்கூடிய சிறப்பான ஆட்சியாக தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு வீடியோ ஏவி நிகழ்ச்சி நடத்தப்பட்டவர்களால் போடப்பட்டது. இதில் நவாஸ் கனி எம்பி காக எடுக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்ட ஏவி யில் ஆடியோ வராததால் அனைவரும் முணுமுணுக்க தொடங்கினர். எம் பி யின் அருகே அமர்ந்து இருந்த ரங்கராஜ் பாண்டே எம்.பியை பார்த்து மேடைக்கு செல்லுமாறு கூறினார் எம் பி நவாஸ் கனி சிரித்துக் கொண்டே மேடைக்கு ஏறினார்.




