உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்து எதிர்த்த வழக்கில் ஹைகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
2018ல் ராணுவ வீரர் தேர்வில் குளறுபடி என நெல்லை முத்துகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சில அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு கூட சரியான தகவல்களை தருவதில்லை என நீதிபதி பட்டு தேவானந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கொடுத்த தகவல்கள் அனைத்தும் தவறாக உள்ளன. பாதுகாப்பு அதிகாரிகளே தவறான தகவல்களை தரலாமா பிறகு பாதுகாப்பு எந்த அளவிற்கு இருக்கும் என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். உங்களின் சிஸ்டமே சரியில்லை என மத்திய அரசின் வழக்கறிஞரிடம் நீதிபதி பட்டு தேவானந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உங்க சிஸ்டம் சரியில்லை, மத்திய அரசைக் கண்டித்த ஹைகோர்ட்..!
