• Tue. Feb 18th, 2025

இன்று தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள் வெளியீடு..!

Byவிஷா

Sep 27, 2023

தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களின் முடிவுகளை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விடைத்தாள்களை மறு கூட்டல் மற்றும் ஒளி நகல் செய்ய அக்டோபர் 3ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை 5 மணி வரை மேலே உள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.