

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சுகன்யா(35). இவர்களுக்கு திருமணம் ஆகி 18ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பிரியதர்ஷினி என்கின்ற 15 வயது மகளும், பிரவீன் குமார் என்கிற 13 வயது மகனும் உள்ளனர்.
இந்நிலையில், மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட நான்கு தனியார் நிதி நிறுவனம் மூலம் நான்கு லட்சம் ரூபாய் அளவு கடனாக பெற்று அவற்றை அதே கிராமத்தைச் சேர்ந்த சுமதி பாலாஜி என்பவருக்கு கொடுத்துள்ளார்.
வாங்கி கொடுத்த கடன் தொகையை சுமதி பாலாஜி என்பவர் சரிவர கட்டவில்லை என தெரிகிறது. இந்நிலையில் சுமதி பாலாஜி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
கடன் தொகையை திரும்பி செலுத்த நிதி நிறுவன ஏஜெண்டுகள் சுகன்யா வீட்டிற்கு தினந்தோறும் வந்து வாங்கி கொடுத்த லோனை நீங்கள் தான் கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த சுகன்யா நேற்று இரவு தனது வீட்டில் எனது சாவிற்கு லோன் வாங்கி திருப்பி கட்டவில்லை என்றும், எனது குடும்பம் காரணம் இல்லை என்றும், எனது சாவிற்கு சுமதி தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சுகன்யாவின் உறவினர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் உடை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முன்டியம்பாக்காம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

