திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை, ரெட்டியாசத்திரத்தை சேர்ந்த கணேசமூர்த்தி(25) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்து ஜாதியின் பெயரை சொல்லி திட்டி கொடுமைப்படுத்துவதாக அளித்த புகாரின் பேரில்

ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் தலைமையில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி சார்பு ஆய்வாளர் கௌசல்யா மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக கணேசமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்





