• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு ஐபோன் வெல்லலாம்..,

ByPrabhu Sekar

Oct 10, 2025

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான வசந்த் அண்ட் கோ சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மூன்று நாள் விற்பனை மற்றும் சிறப்பு கண்காட்சி தொடங்கியது,

இதில் அந்நிறுவன தலைவரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்,

இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் வசந்த் அண்ட் கோ தீபாவளி சிறப்பு தள்ளுபடியை முன்னிட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மூன்று நாட்கள் கண்காட்சி பத்தாம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற உள்ளது இதை கோலாகலமாக இன்று நாம் தொடங்கி வைக்கின்றோம்,

உலகத்தில் உள்ள அனைத்து பிராண்டுகளும் தங்களுடைய லேட்டஸ்ட் ஏ ஐ டெக்னாலஜி
ப்ராடக்ட் முதல் மொபைல் போன் ரெப்ரிஜிரேட்டர் வாஷிங் மெஷின் ஏசி என வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் வாங்கக்கூடிய ஒரு வாய்ப்பு உள்ளது இதை தவறவிடாமல் இதில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,

சிறப்பு தள்ளுபடி விற்பனையாக டோக்கன் கண்டஸ்ட் மூலமாக பம்பர் பரிசாக ஐந்து கார் ஐந்து பைக் ஐந்து செல்போன் மற்றும் 1500 பொருட்கள் பரிசாக கிடைக்க வாய்ப்புள்ளது கண்டிப்பாக இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்,

அனைத்து முக்கிய பிராண்டுகளிலும் தீபாவளி முன்னிட்டு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது சென்னை வர்த்தக மையத்தில் வந்து வாங்குபவர்களுக்கு தினம் ஒரு ஐபோன் வெல்ல வாய்ப்பு உள்ளது அதேபோல் தீபாவளி ஆஃபர் மற்றும் சிறப்பு பரிசும் அளிக்கப்படுகிறது,

குறைந்தது 5000 ரூபாய் பொருள் வாங்குபவர்கள் பரிசு வெல்ல வாய்ப்புள்ளது.