• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ByA.Tamilselvan

Sep 10, 2022

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்த நாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி, வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 5½ ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்.சி-ஏ.எச்) 580 இடங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் பி.வி.எஸ்.சி.-ஏ.எச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022-23-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வரும் 12-ந்தேதி காலை 10 மணி முதல் 26-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் .இடஒதுக்கீடு இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களையும் இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.