அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் பெறப்படும் தொலைதூரக்கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்துக்கு இணையானது என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்து உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து தொலைதூர கல்வி முறை மற்றும் ஆன்லைன் கற்றல் முறையில் பெறப்படும் பட்டங்கள், நேரடி வகுப்புகள் மூலம் பெறப்படும் பட்டங்களுக்கு இணையானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யு.ஜி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து திறந்த நிலை, தொலைதூர கல்வி முறை மற்றும் ஆன்லைன் கற்றல் மூலம் பெறப்படும் இளங்கலை, முதுகலை பட்டங்கள், முதுகலை பட்டயப்படிப்பு சான்றிதழ்கள் அனைத்தும் வழக்கமான முறையில் (நேரடி வகுப்பு) வழங்கப்படும் பட்டங்கள் மற்றும் முதுகலை பட்டயப்படிப்புகளுக்கு சமமாக கருதப்படும்’ என்று கூறப்பட்டு உள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு (திறந்த மற்றும் தொலைதூர கற்றல் திட்டங்கள் மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சிகள்) விதிமுறைகளின் 22ஆவது விதியின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.