• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஜூன் 12 முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!

Byவிஷா

Jun 11, 2023

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர வருகின்ற ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 30-ம் தேதி மாலை முடிவடைகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அயல் நாட்டிற்கான இட ஒதுக்கீடு பற்றிய தகவல்களை அறிய பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.