• Sat. Apr 20th, 2024

இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்

ByA.Tamilselvan

Jun 10, 2023

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும். அதனால் இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுத்த திட்டமிப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல்
தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும், கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும். பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாகவும் மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் வகுப்புகள் நடத்தப்படும் என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *