• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அண்ணா பல்கலையில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்..!

Byவிஷா

Sep 8, 2023

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2024ஆம் ஆண்டுகளுக்கான ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிபிப்பில், பிஎச்.டி., எம்.எஸ்., ரிசர்ச் எம்.எஸ்.,பிளஸ், பிஎச்.டி. போன்ற படிப்புகளுக்கு விருப்பமுள்ள தகுதிவாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், முதுநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்தவர்கள் மற்றும் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதி முடிவிற்காக காத்திருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த படிப்புக்கு உரிய தகுதி பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரும் விண்ணப்பிக்கலாம். இந்த ஆராய்ச்சி படிப்புக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.31 ஆயிரம் ஸ்டைபண்டு மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: cfr.annauniv.edu எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 23. விபரங்களுக்கு: cfr.annauniv.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.