தமிழ்நாட்டில் காலியாக உள்ள பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது.
பொதுப்பிரிவில் விண்ணப்பித்துள்ள 13,650 பேரில் 13,244 மாணவர்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இதுபோன்று, 7.5சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 4,585 மாணவர்களில் 4,466 பேர் துணை கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை மாலை 5 மணி வரை www.tneaonline.org என்ற மாணவர்கள் கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்யலாம். மேலும், வரும் 8ம் தேதி காலை 10 மணிக்கு கலந்தாய்வில் தேர்வு செய்த இடங்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். செப்.8ம் தேதி காலை 10 மணிக்கு வழங்கப்படும் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை மாலை 5 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
காலியாக உள்ள பொறியியல் படிப்புக்கான.., துணை கலந்தாய்வு இன்று தொடக்கம்..!
