• Mon. Apr 29th, 2024

தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு..!

Byவிஷா

Sep 8, 2023

அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2008 முதல் 2011 ஆம் ஆண்டு வரை உள்ள கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளை பிரித்து தனியாக அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்த பள்ளிகளில் 1512 பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகமாக அரசு சார்பில் நிரப்பப்பட்டது.
இந்த பணியிடங்களில் 912 பணியிடங்களுக்கு மட்டும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022 டிசம்பர் மாதம் வரை ஓராண்டுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இறுதியாக வழங்கப்பட்ட தற்காலிக நீட்டிப்பு 2022 ஆம் ஆண்டு மாதத்துடன் முடிவடைந்த நிலையில் தற்போது 2027 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஐந்து ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *