• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா..,

ByP.Thangapandi

Feb 16, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தில் பழமையான காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.,

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு
வகுரணி கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 கிராம மக்களும், வீட்டிலிருந்து மஞ்சள் நீர் எடுத்து வந்து கோவிலின் முன்பு உள்ள தொட்டியில் நிரப்பினால், தொட்டி எவ்வளவு நிரம்புகிறதோ அதே அளவு மழை பெய்து அருகில் உள்ள வகுரணி கண்மாய் நிரம்பி விவசாயம் மற்றும் செல்வ செழிப்பாகும் எனவும், இந்த மஞ்சள் நீரை வீட்டிற்கு எடுத்துச் சென்று தெளித்தால் நோய் நொடி வராது என்பது இப்பகுதி மக்களின் ஐதீகமாக உள்ளது.,

இந்நிலையில் இந்த ஆண்டும் ஆதி வழக்கப்படி மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு வகுரணி, சந்தைப்பட்டி, நடுப்பட்டி, அய்யன்மேட்டுப்பட்டி, கணவாய்பட்டி, நாவார்பட்டி, குறுக்கம்பட்டி, அயோத்திபட்டி உள்ளிட்ட 8 கிராம மக்கள் ஒன்றிணைந்து வீட்டிலிருந்து மஞ்சள் நீரை சாமியாடிம் மேலம் தாளங்கள் முழங்க வெடி வெடித்து ஊர்வலமாக எடுத்து வந்து காமாட்சியம்மனை வணங்கி கோவில் முன்பு உள்ள தொட்டியில் மஞ்சள் நீரை ஊற்றி வழிபாடு செய்தனர்.,

தொடர்ந்து வீடுகளுக்கு தெளிக்க மஞ்சள் நீரை எடுத்து சென்றதுடன், இந்த 8 கிராமத்திலும் உள்ள மாமன் மைத்துனர்கள் மீதும் மஞ்சள் நீர் தெளித்து மஞ்சள் நீராடி திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.,

இதில் 8 கிராம மக்களும் சாதிமத பேதமின்றி ஒற்றுமையாக நடத்தி வரும் இந்த மஞ்சள் நீராட்டு விழாவின் காரணமாக நல்ல மழை பெய்து வகுரணி கண்மாய்க்கு பாத்தியப்பட்ட 8 கிராமங்களும் செழிப்படையும் என கூறப்படுகிறது.,