ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் ரைட்டர். பிராங்க்ளின் ஜேக்கப் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் சமுத்திரகனி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். கடந்த 24-ந்தேதி இப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் குறித்து டைரக்டர் கே.பாக்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்
ரைட்டர் படம் பார்த்தேன். மீண்டும் நாம் முதன்மை இடத்தை தக்கவைக்கக்கூடிய நம்பிக்கை கிடைத்துள்ளது. யாருமே வேடம் போட்டு நடித்ததாக தெரியவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு காவலரின் உண்மையான வாழ்க்கையில் நுழைந்து பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த படத்தில் முதன்மை ரோலில் நடித்துள்ள சமுத்திரகனி ஹீரோவா? இல்லை இயக்குனர் ஹீரோவா? இல்லை தயாரிப்பாளர் ஹீரோவா? என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது. ஆனால் என்னைப்பொறுத்தவரை தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தான் பெரிய ஹீரோ. படம் பாருங்கள் நான் சொன்னது உங்களுக்கு புரியும். ரைட்டர் படத்தை பார்த்தவர்கள் சான்சே இல்லை என்று சொன்னார்கள். விமர்சனங்களைப்பார்த்து விட்டு நானும் படத்தை பார்த்தேன். அனைவருக்குமே சான்சே இல்லை என்ற அந்த அனுபவம் கிடைக்கும். இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.