• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உலகறிந்த தாமஸ் ஆல்வா எடிசன்… தெரியாத உண்மைகள்..

ByAlaguraja Palanichamy

Jul 5, 2022

ஃபோனோகிராஃப் மற்றும் ஒளிரும் மின்சார ஒளியைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசனின்.

பல்வேறு கண்டுபிடிப்புக்களின் சொந்தக்காரர், இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஒன்றில் இருந்தேனும் பிரயோஜனம் அடையாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்த 1300 கண்டுபிடிப்பிற்கு சொந்தக்காரரான தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கை வரலாற்றுப் பார்வையை இந்த கட்டுரையின் வாயிலாக நாம் பார்க்கலாம்.

1847 ம் ஆண்டு அமெரிக்காவில் ஓஹியோவில் உள்ள மிலன் எனும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சேமுவேல் எடிசன் ஒரு மர வியாபாரியாக இருந்தார். தாய் நான்சி எடிசன் ஒரு ஆசிரியையாக பணியாற்றினார். இவர்களது நடுத்தர குடும்பத்தில் 7வதும் கடைசியாகவும் பிறந்தவர்தான் தாமஸ் ஆல்வா எடிசன். தனது 8 வது வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட எடிசன் பள்ளியில் சோம்பேறியாகவும் படிப்பில் மந்தமாகவும் இருந்தார். பின் பள்ளியில் இருந்து நின்ற எடிசனுக்கு தாய் பள்ளிப்படிப்பை கற்பித்தார். இதோடு சேர்ந்து சமய நூல்கள், அறிவியலாளர்களின் புத்தகங்கள் என பல்வேறு புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் காட்டினார்.

தன் 12வது வயதில் எடிசன் தனது பெற்றோரை சம்மதிக்க வைத்து புகையிரத நிலையத்தில் பத்திரிகைகளை விற்பதை ஆரம்பித்தார். மேலும் அங்கே ஒரு சிறு அச்சு இயந்திரத்தை பயன்படுத்தி தனது சொந்த பத்திரிகையான கிரான்ட் ட்ரக் ஹெரால்டு (Grand Trunk Herald) ஐயும் அச்சிட்டு வெளியிட்டார். பின் புகையிரதத்தின் ஒரு பெட்டியில் தனது ஆய்வுகூடத்தை நிறுவி ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். ஒருமுறை தான் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது புகையிரதம் திடீர் என்று நின்றதில் அவரது ஆய்வுகூடத்தில் இருந்த இரசாயணம் கீழே கொட்டியதால் அந்த புகையிரதம் தீப்பிடித்தது. இதனால் கோபம் அடைந்த புகையிரத அதிகாரி அவரது கன்னத்தில் ஓங்கி அடித்ததில் அவரது ஒருபக்க காதும் அவரது ஆயுள் வரை கேளாமலே போனது.

எடிசன் ஏன்? எவ்வாறு ? போன்ற துறு துறுவென கேள்விகேட்கும் குணம் தான் அவரை 1000த்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆக்கியது. ஒறு முறை எடிசன் கோழி அடைகாத்து குஞ்சுபொறிப்பதை பார்த்து தானும் ஏறி இருந்து குஞ்சு பொறிக்க முயன்ற கதையையும் நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இந்த யோசிக்கும் திறனே அவரை இன்றும் உலகம் போற்றற வைத்திருக்கிறது.

வறுமை காரணமாக தன் நண்பனின் உதவியுடன் Western Union Company ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். பின் எடிசன் 1870 இல் நியூஜெர்ஸியில் ஒரு நிறுவனத்தை நிறுவி சில இயந்திரவியலாளர்களையும் வேலைக்கு அமர்த்தினார். 1876 ம் ஆண்டு எடிசன் தனது ஆய்வுகூட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து தொழிற்துறை ஆராய்ச்சி மையத்தை உருவாகினார். 1877ல் எடிசன் ஒலிகளை பதிவு செய்யும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தார். அது ஒலிவரையி (Phonograph) என அழைக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பின் பின் அவரின் ஆராய்ச்சி ஒளியை நோக்கி இடம் பெயர்ந்தது. அதன் பின் மின் விளக்கு பற்றிய ஆய்வு ஆரம்பம் ஆனது.மின்வஇளக்கு பற்றிய ஆராயச்சிகள் இவருக்கு முதலில் தோல்விகளை கொடுத்தது. கடைசியாக 21 அக்டோபர் 1879ல் வெற்றிகரமாக செயல்ப்பட்டதனால் இவ்வுலகம் ஒளிமயமானது.
Phonography எப்படி காதுக்கு ஒலியை கொண்டு சேர்கிறதோ அவ்வாறே கண்ணனுக்கு ஒளியைகொண்டு சேர்க்க பேசும் படங்களை உருவாக்கும் திரைப்பட கருவியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் எடிசன். 1888 ல் முதன் முதலாக திரைப்பட கருவியை உருவாக்கினார். அதன் பெயர் கைனிட்டோஸ்கோப் (Kinetoscope )என அழைக்கப்பட்டது. இதன் படம் சற்று மங்களாகவே தெரிந்தது. இதன் பின் இவரது கண்டுபிடிப்புகள் டைனமோ, X-ray Machine என்று இவரது கண்டுபிடிப்பின் பட்டியல் ஒன்றல்ல இரண்டல்ல நீண்டுகொண்டே சென்றது.

ஃபோனோகிராஃப் மற்றும் ஒளிரும் மின்சார ஒளியின் கண்டுபிடிப்புக்காக அவர் மிகவும் பிரபலமானவர் என்றாலும், எடிசன் மின்சார ஒளி மற்றும் சக்தி, தொலைபேசி மற்றும் தந்தி மற்றும் ஒலிப்பதிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 1,093 காப்புரிமைகளைப் பெற்றார். மென்லோ பார்க், NJல் உள்ள அவரது ஆய்வகத்தில் இயந்திர வல்லுநர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்த ஒரு சிந்தனையாளரை மிகவும் முறையான சிந்தனையாளரை மறைத்துவிட்டார் என்று பல்வேறு கருத்துக்கள் ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கப்படுகின்றன.