• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில தலைவர் மு.ஞானமூர்த்தி கோரிக்கை..,

ByT. Balasubramaniyam

Mar 5, 2026

உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில தலைவர் முனைவர் .மு ஞானமூர்த்தி,அரியலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளருக்கு எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் குழுமூர் – காரைப்பாடி சாலையில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையின் அருகில் அங்கன்வாடி (குழந்தைகள் மையம்) செயல்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு தினமும் அதிக அளவில் குழந்தைகள் வருகை தருகின்றனர்.

அங்கன்வாடி மையம் முன்பாக உள்ள சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சிறு குழந்தைகள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர்கள் சாலை கடக்கும் போது பாதுகாப்பு குறைவு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, குழுமூர் அங்கன்வாடி கட்டிடம் முன்பாக உள்ள சாலையில் உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை நிறைவேற்ற அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில தலைவர் முனைவர் மு. ஞானமூர்த்தி கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.