• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அதிமுக வேட்பாளர் தாமரை எஸ். ராஜேந்திரனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு..,

ByT. Balasubramaniyam

Mar 28, 2026

அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அரசு தலைமை கொறடாவும், மாவட்ட அதிமுக செயலாளருமான தாமரை எஸ். ராஜேந்திரன், அவரது சொந்த கிராமமான தாமரைக் குளத்திற்கு வருகை தந்தார்.

அப்போது அவருக்கு அவரது சொந்த கிராம பொதுமக்கள், பட்டாசு வெடித்து, பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அதிமுக அவைத் தலைவர் இராம ஜெயலிங்கம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி சங்கர், மாவட்ட இணை செயலாளர் பிரேம்குமார், ஒன்றிய செயலாளர்கள் செல்வராசு, பொய்யூர் பாலசுப்பிரமணியம், அரியலூர் நகர செயலாளர் ஏபி செந்தில் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.